வன்னியில் சங்கு சின்னத்தில் இதுவரை தெரிவான வேட்பாளர்கள் விபரம்
வன்னியில் சங்கு சின்னத்தில் இதுவரை தெரிவான வேட்பாளர்கள் விபரம்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியின் வன்னித் தேர்தல் தொகுதி வேட்பாளர்கள் தெரிவு
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியின் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பலரின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அக் கட்சி தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி என்பன இணைந்து ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியில் போட்டியிடுகின்றன.
குறித்த கட்சியில் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவனேசன் (பவான்), ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் துளசி, கரைத்துறைப்பற்று பிரதேச சபை முன்னாள் தவிசாளர் க.விஜிந்தன், முருங்கன் பகுதி வர்த்தகர் அ.றொஜன், முன்னாள் போராளியான க.ஜசோதினி ஆகியோரது பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் ரெலோ மற்றும் புளொட் சார்பாக மேலும் ஒவ்வொருவர் நியமிக்கபடவுள்ளனர்.
Reviewed by Author
on
October 05, 2024
Rating:


No comments:
Post a Comment