ரஞ்சன் ராமநாயக்க தேர்தலில் போட்டியிடலாம்: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதைத் தடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் பொதுத் தேர்தலில் ரஞ்சன் ராமநாயக்க போட்டியிடலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ரஞ்சன் ராமநாயக்க சமர்ப்பித்த வேட்புமனுவை ஏற்றுக்கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை எதிர்த்து, கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மஹிந்த சேனாநாயக்க இந்த அடிப்படை உரிமை மீநல் மனுவை தாக்கல் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment