பருத்தித் துறையில் இடம் பெற்றுள்ள இரட்டை கொலை
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்திதுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்கோவளம் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
54 மற்றும் 53 வயதான இரண்டு பிள்ளைகளின் பெற்றோரே மிகவும் கொடூரமான நிலையில் கற்களால் தலையில் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரட்டைக்கொலை தொடர்பாக பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பருத்தித்துறை நீதிவானுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
குறித்த இருவரும் கொங்கிறீட் கல்லினால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பருத்தித்துறை நீதவானின் பிரசன்னத்திற்கு பின்னரே சடலங்களை மீட்டு மேலும் விசாரணைகள் தொடரும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இரட்டைக் கொலைக்கான காரணம் தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Reviewed by Author
on
October 30, 2024
Rating:


No comments:
Post a Comment