அண்மைய செய்திகள்

recent
-

திருகோணமலையில் அடாவடித்தனம் காட்டும் பிக்கு

🛑பிக்குவின்_அடாவடி 


திருகோணமலை திரியாய்க் கிராமத்தின் பூர்விக வயல் நிலங்களில் முக்கிய வயல் வெளிகளான #வளத்தாமரை #ஆதிக்காடு #ஒட்டுப்புல்மோட்டை #நீராவிக்கண்டல் #வேடன்குளம் என உள்ளடக்கிய வயல் வெளிகளில் மக்கள் பரம்பரை பரம்பரையாக வயற்செய்கை மேற்கொண்டு வரும் நிலையில் புல்மோட்டை அரிசிமலைப் பிக்குவினால் அடாவடியாக கையகப்படுத்தப்பட்ட 88 ஏக்கர்  பொதுமக்களின் உறுதிக் காணியில் விவசாயம் மேற்கொள்ள பாரிய சிரமத்தை மக்கள் எதிர்கொள்கின்றனர். இக்காணிக்கள் அனைத்துமே #உறுதிக்காணிகள்.


வருடா வருடம் பெரும் போக வயற்செய்கையின் போதும் இவவிதமான நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்வதும் பின் பிக்குவின் அடாவடியினால் பயந்து இருப்பதுமான அவல நிலையில் மக்கள் இருக்கின்றனர்.


நீதிமன்றினால் மக்களிடம் காணிகளை கையப்படுத்தக் கோரியும் பிக்கு அடாவடியான முறையில் இச்செய்யற்பாட்டை முன்னெடுப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்





திருகோணமலையில் அடாவடித்தனம் காட்டும் பிக்கு Reviewed by Author on October 05, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.