அண்மைய செய்திகள்

recent
-

பத்து வருடங்களின் பின்னர் அனைவர் வீட்டிலும் கார் தேசிய மக்கள் சக்தி உறுதி

வெளிநாடுகளில் ஒரு மாத வருமானத்தில் வாகனமொன்றை கொள்வனவு செய்ய முடியும். அத்தகைய பொருளாதார நிலையை உருவாக்குவதே தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பு என அக்கட்சியின் காலி மாவட்ட வேட்பாளர் குழுவின் தலைவர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

”நம் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த பணத்தை சேகரித்தாலும், ஒரு டெக்டரைக் கூட வாங்க முடியாது.

ஜப்பானில் உற்பத்தி செய்யப்படும் Vitz ரக காரை 12 இலட்சம் ரூபாவிற்கு இலங்கைக்கு கொண்டுவர முடியும். அவ்வாறு கொண்டு வந்தால் அனைவரும் கொள்வனவு செய்ய முடியும்.

ஆனால் அந்த வாகனங்களுக்கு அரசாங்கம் 70 இலட்சம் ரூபா வரியை அறவிடுகிறது.

வாகனத்தின் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் வாகனத்தை வாங்க முடியாது நிலையில் உள்ளனர். அதற்கு இந்த ஆட்சியாளர்கள்தான் காரணம். 

இலங்கையில் உள்ள அனைத்து வீடுகளிலும் பத்து வருடங்களுக்குள் கார் ஒன்நை வைத்திருக்கும் பொருளாதாரத்தை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் உருவாக்கும்.” என்றார்.




பத்து வருடங்களின் பின்னர் அனைவர் வீட்டிலும் கார் தேசிய மக்கள் சக்தி உறுதி Reviewed by Author on November 02, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.