நீரில் மூழ்கிய உழவு இயந்திரம் - காணாமல் போன மாணவனின் சடலம் மீட்பு
அம்பாறை- காரைத்தீவு பகுதியில் நேற்று (26) உழவு இயந்திரம் வெள்ளத்தில் மூழ்கி காணாமல் போன மாணவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (26) மாலை நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்ற உழவு இயந்திரம், காரைத்தீவு பஸ் நிலையம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
உழவு இயந்திரத்தில் 11 மாணவர்கள், சாரதி மற்றும் உதவியாளர் பயணம் செய்தனர்,
இதன்போது, வௌ்ளத்தில் சிக்கிய 5 மாணவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டனர்.
அதன்படி, காணாமல் போன மாணவர்களில் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நீரில் மூழ்கிய உழவு இயந்திரம் - காணாமல் போன மாணவனின் சடலம் மீட்பு
Reviewed by Author
on
November 27, 2024
Rating:

No comments:
Post a Comment