அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு சிலாவத்துறை பகுதியில் தீயில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு-சிலாவத்துறை பகுதியில் தீயில் சிக்கி ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த 75 வயதுடையவர் என்பதுடன், அவர் தனது மகனின் வீட்டிற்கு அருகிலுள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்துள்ளார்.

குளிரான காலநிலை காரணமாக வீட்டுக்குள் பற்றவைக்கப்பட்ட தீ பரவியதில் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




முல்லைத்தீவு சிலாவத்துறை பகுதியில் தீயில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு Reviewed by Author on November 30, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.