மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு: காலநிலையால் மக்கள் அசௌகரியம்!
தற்போது நிலவும் காலநிலை காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பெறப்படும் மரக்கறிகளின் அளவு 60 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்காரணமாக, மரக்கறிகளை கொள்வனவு செய்ய வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பலத்த மழையுடன் கூடிய வானிலை காரணமாக குறித்த வர்த்தக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் தரமான மரக்கறிகள் விற்பனை செய்யப்படாமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் ஐ.ஜி.விஜேனந்த தெரிவித்தார்.
அதன்படி, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் வெளி மாகாணங்களில் இருந்து வரும் மரக்கறிகள் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து வரும் மரக்கறிகளின் அளவு வெகுவாக குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மழை காரணமாக மரக்கறி விளைச்சல்கள் சேதமடைந்துள்ளதால் இந்நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்த அவர், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கரட் மற்றும் லீக்ஸ் கிலோ ஒன்றின் தொகை விலை 100 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
Reviewed by Author
on
November 30, 2024
Rating:


No comments:
Post a Comment