அண்மைய செய்திகள்

recent
-

ஆலய பூசகரை கட்டிவைத்துக் கொள்ளை -யாழில் சம்பவம்

ஆலய பூசகரை கட்டி வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பணத்தினையும் கொள்ளை இட்டுச் சென்ற சம்பவம் ஒன்று யாழ். கைதடியில் இடம்பெற்றுள்ளது.

கைதடி ஏ9 வீதியில் அமைந்துள்ள கௌரி அம்மன் ஆலயத்திலேயே இந்த கொள்ளை சம்பவம் நேற்று (27) முற்பகலில் இடம்பெற்றுள்ளது.

பூசகரின்  அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் விரைந்தபோது இரண்டு கொள்ளையர்கள் பூசகர் அணிந்திருந்த 2 பவுண் தங்கச் சங்கிலியையும்,  45 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளையருக்கு உதவிய பெண் ஒருவர் இதன் போது பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைதான சந்தேக நபரை இன்று (28) சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, தப்பிச் சென்ற இரு கொள்ளையர்களையும் கைது செய்யும் நடவடிக்கையிலும் பொலிஸார்  ஈடுபட்டுள்ளனர்.





ஆலய பூசகரை கட்டிவைத்துக் கொள்ளை -யாழில் சம்பவம் Reviewed by Author on November 28, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.