அண்மைய செய்திகள்

recent
-

ரிஷாட் – மஸ்தான் ஆதரவாளர்களிடையே முறுகல் - இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில்

 வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பாராளுமன்றத் தேர்தல் இறுதிப் பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட குழப்ப நிலையில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ரிஷாட் பதியூதீன் பயணித்த வாகனம் உட்பட அவரது தொடரணி வாகனங்கள் மீது தக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,




வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் பிரதான வீதிக்கு அருகாக நேற்று (11) இரவு 8.00 மணியளவில் காதர் மஸ்தானின் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது குறித்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த ரிஷாட் பதியுதீனின் ஆதரவாளர்கள் பொதுக்கூட்டத்தை பார்த்து கூச்சலிட்டுச் சென்றுள்ளனர்.


சற்று நேரத்தில் குறித்த கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த பகுதிக்கு அருகே, குறித்த மோட்டார் சைக்கிள்களுக்கு பின்னால் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனும் அவரது ஆதரவாளர்களும் பயணித்த வாகனத் தொடரணிகள் பிரதான வீதி ஊடாக பயணித்துள்ளது.



இதன்போது, இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டதுடன் சற்று நேரத்தில் அது கைகலப்பாக மாறியுள்ளது. கலவரத்தில் ரிஷாட் பதியூதீன் பயணித்த வாகனம் உட்பட வாகனத் தொடரணி மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


குறித்த வாகனத்திற்குள் ரிஷாட் பதியுதீன் இருந்த நிலையில் அவரது வாகன கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன், அவரது ஆதரவாளர்களின் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலையடுத்து அந்த வாகனத் தொடரணி அந்த பகுதியில் நிறுத்தாமல் வேகமாக சென்றது.



சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் நிலமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுத்திருந்தனர். சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


இதேவேளை, இச்சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் சூடுவெந்தபுலவு பகுதியில் இடம்பெற்ற காதர் மஸ்தானின் பொதுக் கூட்டத்தில் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்த அமைதியின்மை சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னர் காதர் மஸ்தானின் பிரச்சாரக்கூட்டம் பொலிசாரின் பாதுகாப்புடன் தொடர்ந்து இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



ரிஷாட் – மஸ்தான் ஆதரவாளர்களிடையே முறுகல் - இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் Reviewed by Author on November 12, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.