சிறப்பாக இடம் பெற்ற மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி விடுதிசாலை மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடலும் நிர்வாக தெரிவும்
மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் டிலாசால் விடுதி சாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்களுக்கான முதலாவது வருட ஒன்று கூடல் நிகழ்வும் புதிய நிர்வாக அங்குரார்பண நிகழ்வும் நேற்று சனிக்கிழமை மாலை புனித டிலாசால் விடுதிசாலை கேட்போர் கூடத்தில் அருட்சகோதரர் செல்வதாஸ் தலைமையில் இடம் பெற்றது
"நினைவில் மகிழ நினைவுகள் தொடர" எனும் தொணிப்பொருளில் பழைய மாணவர்கள் மத்தியில் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த ஒன்று கூடலில் டிலாசால் விடுதி சாலையில் கல்வி கற்று தற்போது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வசித்து வரும் நூற்றுக்கணக்கான பழையமாணவர்கள் கலந்து கொண்டனர்
அதே நேரம் டிலாசால் விடுதிச்சாலையில் கல்வி கற்று விடுதிசாலை பொறுப்பாளர்களாக கடமையாற்றிய அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லாஸ்,அருட்சகோதரர் ஒகஸ் ரீன்,அருசகோதரர் சந்தியாகு,அருட்சகோதரர் மனோ,அருட்சகோதரர் கிருபா உட்பட அருட்சகோதரர்களும் குறித்த விடுதிசாலையில் கல்வி கற்று தற்போது அருட்தந்தைகளாக பணி செய்யும் அருட்தந்தையர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்
தொடர்சியாக குறித்த அமைப்பு பாடசாலை மற்றும் விடுதிசாலை நலன் சார்ந்து செயற்படுவதை அடிப்படையாக கொண்டு 2025 ஆண்டுக்கான நிர்வாக தெரிவும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment