அண்மைய செய்திகள்

recent
-

மாவடிப்பள்ளி அனர்த்தம் இடம்பெற்ற இடம் தொடர்பில் ஆராய்வு-உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்னம்

மாவடிப்பள்ளி அனர்த்தம் இடம்பெற்ற பகுதிக்கு விஜயம் செய்து விபத்து குறித்த விசாரணைகளை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம ஆலோசனைக்கமைய  கல்முனை பிராந்திய  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  ரீ. எச். டி .எம். எல். புத்திகவின்   வழிகாட்டலில் குறித்த விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் தலைமையிலான பொலிஸ்  குழுவினர்  விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.அத்துடன் காரைதீவு பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் உத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர்.

அப்பகுதியில் வெள்ள நிலை ஏற்பட்ட போது சுமார் 5 அடிக்கும் அதிகமான உயரத்தில் வெள்ளம் சென்றுள்ளதாகவும் மாணவர்களை ஏற்றி வந்த உழவு இயந்திரம் சுமார் 150 மீற்றர் இயந்திரத்துடன் இணைப்பை துண்டிக்கக் கூடிய வகையில் பெட்டி வேறாக பயணித்திருக்க கூடும் என்ற கோணத்தில் பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தவிர விபத்து நடைபெற்ற போது அங்கு என்ன நடந்தது யார் யார் பயணித்தார்கள் போன்ற கேள்விகள் தொடுக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.கடந்த 26.11.2024 செவ்வாய்க்கிழமை அன்று நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்ற 12 பேரை  ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம்   விபத்திற்குள்ளானமை யாவரும் அறிந்ததே.இதன்போது நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரியிலிருந்து சம்மாந்துறைக்கு விடுமுறையில் சென்ற மாணவர்கள் இச்சம்பவத்தில்   பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன்  இதுவரை மொத்தமாக 08 சடலங்கள்   மீட்புப் குழுவினரால்  மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு குறித்த சடலங்கள் மீதான மரண விசாரணைகளை  திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர்  மேற்கொண்டிருந்தார்.

பின்னர்  மரண விசாரணைகள்  முடிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் சடலங்கள்  கையளிக்கப்பட்டன.

இந்த மீட்பு நடவடிக்கையில் சடலங்களாக   முகமட் ஜெசில் முகமட் சாதீர்(வயது-16),  அப்னான், பாறுக் முகமது நாஸிக்(வயது-15) ,சஹ்ரான்(வயது-15),அலியார் முகமது யாசீன்(வயது-15), தஸ்ரிப்,   6 மத்ரசா மாணவர்களும்  உழவு இயந்திர சாரதி   உதுமாலெப்பை முகமது அகீத்(வயது-17) ,பொது மகன் கல்முனை புகை பரிசொதனை நிலைய ஊழியர்  அஸ்மீர்(வயது-தெரியவரவில்லை) உள்ளடங்குவர்.குறிப்பாக இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம் விசேட அதிரடிப்படை பொலிஸார்  பங்கேற்றுள்ளதுடன் சாய்ந்தமருது ஜனாசா நலன்புரி மக்கள் பேரவை மாளிகைகாடு ஜனாசா நலன்புரி அமைப்பு காரைதீவு தொண்டர்கள் இன மத வேறுபாடு இன்றி  தன்னார்வ இளைஞர் குழுவினரும் ஈடுபட்டிருந்தனர்.







மாவடிப்பள்ளி அனர்த்தம் இடம்பெற்ற இடம் தொடர்பில் ஆராய்வு-உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்னம் Reviewed by Author on December 01, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.