வெள்ளத்தின் பின் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்!
வெள்ள அனர்த்தத்தின் பின்பு எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்து இருப்பதால், மக்கள் விழிப்பாக செயற்படுமாறு கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த. வினோதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நடந்த ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை வைத்தியர் த. வினோதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
அண்மை நாட்களாக நிகழ்ந்த வெள்ள அனர்த்தத்தினால் பெருமளவானோர் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தனர். இவர்கள் வெள்ள நீரில் பயணம் செய்திருந்தனர். வெள்ளநீரில் கலந்துள்ள எலியின் சிறுநீர் மூலம் பக்ரீறியா தொற்று ஏற்பட்டு குறித்த நோய் ஏற்படுகிறது.
எனவே, கடுமையான காய்ச்சல் மற்றும் கால் நோ, கண்சிவப்பு போன்ற அறிகுறி காணப்பட்டால் மருத்துவ உதவியைப்பெற்று எலிக்காய்சலில் இருந்து பாதுகாக்குமாறு வைத்தியர் த. வினோதன் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
Reviewed by Author
on
December 02, 2024
Rating:


No comments:
Post a Comment