மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்து பொருட்களை கையளித்த மன்னார் மறைமாவட்ட ஆயர்.
நாட்டில் ஏற்பட்ட புயல் அதனை தொடர்ந்து ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களின் அவசர மருத்துவ தேவையைக் கருத்தில் கொண்டு,மன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மருத்துவப் பொருட்களை மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (9) மன்னார் ஆயர் இல்லத்தில் வைத்து நன்கொடையாக வழங்கினார்.
இதன் போது மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.எச்.எம். அஸாத் ,வைத்தியர் ரூபன் லெம்பேட் மற்றும் மருத்துவமனை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு மருத்துவ பொருட்களைப் பெற்றுக் கொண்டார்.
இதன் போது மன்னார் ஆயர் இல்ல நிதி பொறுப்பாளர் அருட்தந்தை சுரேன் ரவல் அடிகளாரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
v
Reviewed by Vijithan
on
December 10, 2025
Rating:


No comments:
Post a Comment