மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு வவுனியாவில் சம்பவம்
வவுனியா, பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (6) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தரணிக்குளம் பகுதியைச் சேர்ந்த குரு என்ற இரு பிள்ளைகளின் தந்தையே மரணமடைந்துள்ளார்.
பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் நபர் ஒருவர் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில் நீருக்குள் தவறி வீழ்ந்து மூழ்கியுள்ளார்.
இதனை அவதானித்த மற்றொரு நபர் சம்பவம் தொடர்பாக ஊர் மக்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தார். இதனையடுத்து மேற்படி நபரைத் தேடும் பணி ஊர்மக்களால் முன்னெடுக்கப்பட்டது.
மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு வவுனியாவில் சம்பவம்
Reviewed by Author
on
December 07, 2024
Rating:
Reviewed by Author
on
December 07, 2024
Rating:


No comments:
Post a Comment