விசுவமடு பிரதேசத்தில் 160 குடும்பங்களுக்கு பொங்கல் பானைகள் பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விசுவமடு பிரதேசத்தில் 2025ம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு
கனடா மொன்றியல் வெஸ்ட் ஜலெண்ட் தமிழ் கலாச்சார சங்கத்தின் மூலமாக
160 குடும்பங்களுக்கான பொங்கல் பானை, பொங்கல் பொருட்கள் மற்றும் உதவிப்பணமாக 500 ரூபாய் என்பன வழங்கி வைக்கப்பட்டது
குறித்த நிகழ்வு இன்று விசுவமடு பிரதேசத்தில் சமூக செயற்ப்பாட்டாளர் வேலாயுதம் கரிகாலன் தலைமையில் இடம்பெற்றது
கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு குறித்த பொருட்களை வழங்கி வைத்தனர்
கனடா மொன்றியல் வெஸ்ட் ஜலெண்ட் தமிழ் கலாச்சார சங்கம் தமிழர்களின் மரபுத்திங்கள் தினத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக 3வது ஆண்டாக இந்த பொங்கல் பொருட்களை இன்று வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது
கனடா மொன்றியல் வெஸ்ட் ஜலெண்ட் தமிழ் கலாச்சார சங்கத்தின் போசகரும் பொருளாளரும் ஆலோசகருமான முருகன் கோவில் பிரதம குருக்கள் ஸ்ரீ ஐயா அவர்களுக்கும் இந்த பொங்கல் பொருட்களுக்கான நிதி ஒழுங்கமைப்புகள் அனைத்தையும் பொறுப்பாக நின்று ஒழுங்கமைப்பு செய்து தந்த திரு வாகிசன் அண்ணா அவர்களுக்கும் கிராம மக்கள் சார்பாக தமது நன்றிகளை தெரிவித்தனர்

No comments:
Post a Comment