மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளரை கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு உத்தரவு
வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோவை எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(12) அவரது அலுவலகத்தில் வைத்து கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 09 ஆம் திகதி முல்லைத்தீவில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளும் வகையில் எதிர்வரும் 15ம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு கடிதம் வழங்கப்பட்டது.
மன்னார் கோந்தை பிட்டியில் அமைந்துள்ள குற்ற விசாரணை அலுவலகத்தில் இருந்து வருகை தந்த பொலிஸார் குறித்த அழைப்புக்கடிதத்ததை கையளித்துள்ளனர்.
இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (12) காலை மன்னாரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவரது மனைவியிடம் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில்,அவர் வீட்டில் இல்லாத நிலையில் இன்றைய தினம்(12) மதியம் மன்னாரில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று குறித்த கடிதத்தை கையளித்தனர்.
எனினும் எதிர்வரும் 15ம் திகதி தன்னால் விசாரணைக்கான சமூகளிக்க முடியாத நிலை உள்ளதாகவும்,அதற்கான திகதி யை மாற்றி வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அதற்கு அமைவாக எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று வாக்கு மூலத்தை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
Reviewed by Author
on
January 12, 2025
Rating:




No comments:
Post a Comment