மன உளைச்சலில் தனக்கு தானே தீ வைத்துக்கொண்ட மூதாட்டி - யாழில் சம்பவம்
யாழ்ப்பாணத்தில், மன உளைச்சலுக்கு உள்ளான வயோதிபப் பெண்ணொருவர் நேற்று முன்தினம் (25) தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ வைத்து உயிர்மாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுன்னாகம் கிழக்கு, குமாரசுவாமி புலவர் வீதியைச் சேர்ந்த 80 வயதுடைய வயோதிப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண்ணின் பிள்ளைகள் வேலைகளுக்கு செல்வதனால் அவர் பெரும்பாலான நேரங்களில் தனிமையில் இருந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகிய நிலையில் வீட்டுக்கு அருகேயுள்ள வாழைத்தோட்டத்திற்கு சென்று, மண்ணெண்ணெயை தன்மீது ஊற்றி, தீ மூட்டி உயிர்மாய்த்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
Reviewed by Author
on
January 27, 2025
Rating:


No comments:
Post a Comment