இந்தியாவில் இருந்து வடக்கிற்கு கொண்டுவரப்பட்டுள்ள ஆபத்தான பொருள்
யாழ். வேலணை - துறையூர் பகுதியில் பெருமளவான விவசாய பூச்சி கொல்லி மருந்து போத்தல்களுடன் சந்தேகநபர்கள் நால்வர் நேற்று (03) மாலை கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் இருந்து எடுத்து வரப்பட்ட குறித்த பூச்சிகொல்லி போத்தல்களை வாகனம் ஒன்றில் எடுத்துச் செல்ல முற்பட்டவேளை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பூச்சி கொல்லிகளின் ஒட்டுமொத்த விலை 50 மில்லியன் ரூபா என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரும் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.

No comments:
Post a Comment