அண்மைய செய்திகள்

recent
-

வில்பத்து தேசிய பூங்கா பகுதியில் உயிரிழந்த நிலையில் 11 டொல்பின்கள் மீட்பு.

 வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லைக்குட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 சாதாரண குப்பி டால்பின்கள் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (7) மீட்கப்பட்டுள்ளது.


 முள்ளிக்குளம்  தள பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய அப்பகுதிக்குச் சென்ற வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று சோதனை செய்தனர்.


இதன் போது டால் பின்கள் குழு ஒன்று இறந்து கிடந்ததை அவதானித்துள்ளனர்.


பின்னர் இறந்த டால்பின்களை மீட்டு   பரிசோதித்ததன் பின்னர் இது தொடர்பான தகவல்கள் புத்தளம் நீதிவான் நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (7)   சமர்ப்பிக்கப்பட்டது.



அதன்படி அனுராதபுரம் வனவிலங்கு கால்நடை வைத்திய அலுவலக அதிகாரிகள்  உயிரிழந்த டால்பின்களின் மரணம் தொடர்பான  பிரேத பரிசோதனை யை மேற்கொண்டனர்.


இதன் போது வலையில் சிக்கியதால் அவை  இறந்ததாக மருத்துவர்கள் ஊகிக்கின்றனர்.


 மேலும் அவற்றின் மரணத்தை உறுதிப்படுத்துவதற்காக  விலங்குகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பேராதனை கால்நடை மருத்துவ பீடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிய வருகிறது








வில்பத்து தேசிய பூங்கா பகுதியில் உயிரிழந்த நிலையில் 11 டொல்பின்கள் மீட்பு. Reviewed by Author on January 08, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.