தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை விடுவிக்குமாறு கோரி கையெழுத்து போராட்டம்
விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவித்து மாவீரர் தினத்தில் தமது பிள்ளைகளுக்கான நினைவேந்தலை சுதந்திரமாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கையெழுத்து போராட்டம் ஒன்று இன்று (08) முன்னெடுக்கப்பட்டது
தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணிக் குழு உறுப்பினர்கள் மாவீரர்கள் பெற்றோர்கள் உரித்துடையவர்கள் இணைந்து குறித்த கையெழுத்து போராட்டத்தை இன்று(08) முன்னெடுத்தனர்
தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தின் காணியின் பெரும்பகுதி இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டிருக்கின்ற நிலைமையில் அந்த அபகரிக்கப்பட்ட துயிலுமில்ல காணிக்கு முன்பாக குறித்த கையெழுத்து போராட்டம் முன்னேடுக்கப்பட்டது
நாட்டினுடைய புதிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்கள் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதி வழங்கியதை போன்று தங்களுடைய பிள்ளைகளின் கல்லறைகள் இருக்கின்ற குறித்த காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவித்து தருமாறு கோரி குறித்த கையெழுத்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்
இதன்போது கருத்து தெரிவித்தவர்கள் குறித்த காணியில் இராணுவத்தினர் இருந்துகொண்டு கல்லு அறுத்து விற்கின்ற செயற்பாடுகளையே செய்கின்றார்கள் எனவும் இது ஒரு இராணுவத்தின் தேவைக்காக சுவீகரிக்கப்பட்ட காணி அல்ல எனவும் ஆகவே இந்த காணியை விடுவித்து தமது உறவுகளை சுதந்திரமாக நினைவு கூறுவதற்கு ஏற்ற வகையிலே குறித்த காணியை விடுவித்து தருமாறும் குறித்த கையெழுத்துக்கள் அடங்கிய மகஜரை வடக்கு மாகாண ஆளுநர் ஊடக ஜனாதிபதிக்கு அனுப்ப உள்ளதாகவும் உறவுகள் தெரிவித்தனர்
Reviewed by Author
on
January 08, 2025
Rating:











No comments:
Post a Comment