அண்மைய செய்திகள்

recent
-

108 பானைகளில் பொங்கல் பொங்கி சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மாவட்ட பொங்கல் விழா-

 இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஒழுங்கமைப்பில் வேட்டையா முறிப்பு அருள்மிகு ஆதி விநாயகர் ஆலயம் இணைந்து ஏற்பாடு செய்த  மாவட்ட பொங்கல் விழா நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (9) காலை 9.30 மணியளவில் வேட்டையா முறிப்பு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.


-மாவட்ட இந்து சமய கலாசார உத்தியோகத்தர் அ.தனுஜன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.


சிறப்பு விருந்தினர்களாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் டி.சி.அரவிந்தராஜ்,மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப், நானாட்டான் பிரதேசச் செயலாளர் கே.சிவசம்பு,  ஆகியோர்  உள்ளடங்களாக கௌரவ விருந்தினர்களாக மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் உள்ளடங்களாக  பலர் கலந்து கொண்டனர்.


காலை 9.30 மணியளவில் பொங்கல் பண்பாட்டு பேரணி ஆரம்பமானது.அதனைத்தொடர்ந்து மங்கள வாத்திய இசையுடன் விருந்தினர்கள் வரவேற்கப் பட்டனர்.


தொடர்ந்து சம்பிரதாய முறையில் 108 பானைகளில் பொங்கல் பொங்கி கும்மி நடனம் இடம்பெற்றது.அதனைத்தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டுகள்,மற்றும் நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.













108 பானைகளில் பொங்கல் பொங்கி சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மாவட்ட பொங்கல் விழா- Reviewed by Author on February 09, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.