சடலம் கொண்டு போனவர்கள் மீது மோதிய வாகனம்!
யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் 6 பேர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோப்பாய் - கைதடி வீதியில் உள்ள இந்து மயானத்திற்கு பூதவுடலை எடுத்து சென்றவர்கள் மீது நேற்று (21) வெள்ளிக்கிழமை வீதியால் மிக வேகமாக வந்த வாகனம் மோதி தள்ளி விட்டு, அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், தப்பி சென்ற வாகனத்தினை கண்காணிப்பு கெமராக்களின் காணொளிகள் அடிப்படையில் தேடி வருகின்றனர்.
சடலம் கொண்டு போனவர்கள் மீது மோதிய வாகனம்!
Reviewed by Author
on
February 22, 2025
Rating:

No comments:
Post a Comment