அண்மைய செய்திகள்

recent
-

இளைஞனை கடத்தி 80 இலட்சம் ரூபா பணத்தை அபகரித்த கும்பல்! யாழில் சம்பவம்

 யாழ் நகரில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபா பணம் அபகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வெளிநாடு செல்வதற்கு ஆர்வமாகவிருந்த இளைஞரொருவரிடம் 80 இலட்சம் ரூபா வரையான பணத்தை வங்கியில் வைப்பிலிட்டு வங்கி அறிக்கையை நேரடியாக வந்து தமக்கு காட்டுமாறு வெளிநாட்டு முகவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதிக்குச் சென்ற இளைஞனை காரில் கடத்திச் சென்ற குறித்த குழு இளைஞரின் வங்கிக் கணக்கில் இருந்த 80 இலட்சம் ரூபா பணத்தை மற்றுமொருவரின் வங்கி கணக்கிற்கு மாற்றிவிட்டு இளைஞரை கோப்பாய் பகுதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்தார்.

சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் பணம் மாற்றப்பட்ட வங்கி கணக்கிற்கு உரித்தான பெண்ணொருவரை கைது செய்ததுடன் கடத்தலில் ஈடுபட்ட மேலும் மூவரை கைது செய்தனர்.

இந்நிலையில் குறித்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து பணம் வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் பணத்தை மீட்பது தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைதான நான்கு சந்தேக நபர்களையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.




இளைஞனை கடத்தி 80 இலட்சம் ரூபா பணத்தை அபகரித்த கும்பல்! யாழில் சம்பவம் Reviewed by Author on February 09, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.