யாழில் விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்தை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (08) நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவர், யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகமும் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று கூறினார்.
அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்திற்கு ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
"நாங்கள் இரண்டு மாதங்கள் மற்றும் 10 நாட்கள் பாஸ்போர்ட் பிரச்சினை பற்றிப் பேசினோம், அமைச்சரவையுலும் பேசினோம், நிறுவன பிரதானிகளை அழைத்துப் பேசினோம்,
கூடுதலாக, நீதித்துறை செயல்முறைகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் தற்போதைய பாஸ்போர்ட் சிக்கல்களைத் தீர்ப்பது குறித்தும் பேசினோம்.
யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்தைத் திறப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, அந்த முடிவை செயல்படுத்த தேவையான பணியாளர்களை நியமிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
தற்போது, அந்த அமைச்சரவை முடிவு பொது சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
பொது சேவை ஆணைக்குழு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் அதற்கான தீர்மானத்தை எடுக்கும்.
"அந்த முடிவு எடுக்கப்பட்ட பிறகு, இந்த அலுவலகத்தை 24 மணி நேரமும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
Reviewed by Author
on
February 08, 2025
Rating:


No comments:
Post a Comment