தலை மன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களையும் எதிர் வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.
மன்னார் கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை (07-03-2025) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று வியாழக்கிழமை (20) உத்தரவிட்டார்.
தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த 4 மீனவர்கள் 1 படகுடன் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று வியாழன் அதிகாலை கடற்படையினரால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் வடமத்திய மாகாண கடற் படையினரின் கூட்டு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைது செய்யப்பட்ட குறித்த 4 இந்திய மீனவர்களும் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் 4 மீனவர்களும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை(7-03-2025) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்
Reviewed by Author
on
February 20, 2025
Rating:




No comments:
Post a Comment