இலங்கையின் சில பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டின் சில மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக உள்ளூர் பகுதிகளில் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கு பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இலங்கையின் சில பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை
Reviewed by Vijithan
on
March 18, 2025
Rating:

No comments:
Post a Comment