சந்தேகநபரொருவரை கைதுசெய்ய உதவி கோரும் பொலிஸார்
பல பகுதிகளில் பதிவாகியுள்ள வாகனம் மற்றும் நிதி மோசடி உள்ளிட்ட மோசடி நடவடிக்கைகளுக்காக தேடப்படும் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
2020.08.25 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வாகன தரிப்பிடத்திலிருந்த ஒரு கோடியே 65 இலட்சம் ரூபா பெறுமதியான ஜீப் வண்டியொன்று கொள்ளையிடப்பட்ட சம்பவம் மற்றும் 2023.12.18 அன்று வாகனமொன்றை வழங்குவதாக தெரிவித்து ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாவை மோசடி செய்த சம்பவம் தொடர்பிலும் தேடப்பட்டு வரும் சந்தேக நபரை கைதுசெய்வதற்கு பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சந்தேக நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய அவர் தொடர்பில் தகவல் அறிந்தால் 071-8591735 மற்றும் 071-8596507 ஆகிய அவசர தொலைபேசி இலக்கங்களை
தொடர்பு கொள்ளுமாறு பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment