தபால் மூல வாக்குப்பதிவு நிறைவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (29) மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்தது.
அதன்படி, தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
அதன்படி, தபால் வாக்குகளை பதிவு செய்யாதவர்கள் இனி வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க எவ்வித வாய்ப்பும் இல்லை என தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இம்முறை உள்ளூராட்சித் தேர்தலுக்கு 648,495 பேர் தபால் மூலம் வாக்குகளைப் பதிவு செய்யத் தகுதி பெற்றிருந்தனர்.
இதற்கிடையில், 4 நாட்கள் நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பு மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
வாக்களிப்பு மிக உயர்ந்த மட்டத்தில் இருந்ததை தனது அமைப்பு அவதானித்ததாக அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
முதல் நாளிலேயே தபால் மூல வாக்களிப்பு 60% ஐத் தாண்டியதாகக் கூறிய அவர், நான்கு நாள் காலகட்டத்தில் தபால் வாக்குப்பதிவு உயர் மட்டத்தில் இருந்ததாகவும் கூறினார்.
ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும்போது பிரச்சாரத் திட்டங்கள் இருந்தபோதிலும், இந்தத் தேர்தலின் போது அவை வாக்களிப்பு நிலையங்களை சுற்றி காணப்படவில்லை என்று பெஃப்ரல் அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
தபால் மூல வாக்குப்பதிவு நிறைவு
Reviewed by Vijithan
on
April 29, 2025
Rating:

No comments:
Post a Comment