தந்தையின் இயக்கிய லொறியின் சில்லில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி
பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருக்மல்கந்துர பகுதியில், வீட்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்று பின்னோக்கி இயக்கப்பட்டபோது, வீட்டில் இருந்த ஒரு வயது ஏழு மாதக் குழந்தை லொறியின் இடது பின்பக்கச் சக்கரத்தின் கீழ் சிக்கி உயிரிழந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குழந்தை பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த குழந்தை, பலாங்கொடை, தெப்பலமுல்ல பகுதியைச் சேர்ந்த லொறி ஓட்டுநரின் மகன் ஆவார்.
விபத்தை ஏற்படுத்திய 39 வயதான குழந்தையின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தந்தையின் இயக்கிய லொறியின் சில்லில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி
Reviewed by Vijithan
on
April 14, 2025
Rating:

No comments:
Post a Comment