அண்மைய செய்திகள்

recent
-

சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் மக்கள் பாதுகாப்பான பயணங்களை முன்னெடுக்க வேண்டும்.-மது போதையில் வாகனம் செலுத்துவது ஏற்புடையது இல்லை- மன்னார் மாவட்ட தொற்றா நோய் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி ஒஸ்மன் டெனி

 எதிர் வரும் சித்திரைப் புத்தாண்டு பண்டிகையின் போது மக்கள் பாதுகாப்பாக பயணங்களை முன்னெடு வேண்டும் என்பதோடு மது போதையில் வாகனம் செலுத்துதல் முற்றாக தடை செய்யப்பட வேண்டியது என மன்னார் மாவட்ட தொற்றா நோய் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி  வைத்திய கலாநிதி துரைநாயகம் ஒஸ்மன் டெனி தெரிவித்துள்ளார்.


இன்று வியாழன் (3) காலை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,


எதிர் வரும் சித்திரைப் புத்தாண்டு பிறப்பு எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான வருடமாக பிறக்க உள்ள நிலையில் புத்தாண்டு காலப்பகுதியில் மக்களாகிய நாங்கள் சில விடையங்களை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.


சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பொதுவாக மது அருந்தி விட்டு வாகனங்களை செலுத்துதல் அல்லது மது அருந்தி விட்டு வேறு இடங்களுக்கு பயணித்தல் மற்றும் பட்டாசு கொழுத்துதல் உள்ளிட்ட விடயங்களில் அவதானமாக செயல்பட வேண்டும்.


எனவே மது அருந்திவிட்டு வாகனங்களை செலுத்துவதை முற்றாக தவிர்த்து கொள்ள வேண்டும்.மேலும் பாதுகாப்பான வகையில் பட்டாசுகள் மற்றும் வானவேடிக்கைகள் கொளுத்த வேண்டும்.புத்தாண்டையொட்டி விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை  மாவட்டத்தில் முன்னெடுக்கின்ற போது மருத்துவக் குழுவுடன் இணைந்து முதலுதவி குழுவையும் இணைத்துக் கொண்டு குறித்த நிகழ்வுகளை நடாத்துவது ஏற்புடையதாக இருக்கும்.


எனவே புத்தாண்டு நிகழ்வுகளை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து முன்னெடுக்கின்ற போது குறித்த விடயங்கள் குறித்து அனைவரும் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.


இதேவேளை தற்போது மழை பெய்து கொண்டு இருப்பதால் நுளம்பின் பெருக்கம் அதிகரித்துள்ளது.


எனவே இதனால் டெங்கு நோய் பரவும் சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளது.எனவே மக்கள் பொறுப்புடன் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழலை மழைநீர் தேங்காத வகையில் வைத்திருக்க வேண்டும்.இதனால் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை தவிர்த்து டெங்கு நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.




சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் மக்கள் பாதுகாப்பான பயணங்களை முன்னெடுக்க வேண்டும்.-மது போதையில் வாகனம் செலுத்துவது ஏற்புடையது இல்லை- மன்னார் மாவட்ட தொற்றா நோய் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி ஒஸ்மன் டெனி Reviewed by Vijithan on April 03, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.