நாமலின் கருத்துக்கு X Twitter தளத்தில் பதிலடி கொடுத்த கனடாவின் பிரம்டன் மேயர்
"தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்திற்கு ராஜபக்சேக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது, இந்தக் குடும்பத்தின் கைகளால் இழந்த அப்பாவி பொதுமக்களின் உயிர்களை அங்கீகரித்து, நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதற்கான உறுதியான சமிக்ஞையாகும்.
இனப்படுகொலை எதுவும் நடக்கவில்லை என்று உறுதியாக இருந்தால், ராஜபக்சே குடும்பத்தினர் நீதியைத் தடுத்து வழக்குத் தொடரப்படாமல் ஒழிந்து கொள்வதை விட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்," என்று கனடா அரசியல்வாதி பேட்ரிக் பிரவுன், ஒன்ராறியோவின் பிராம்ப்டனில் சமீபத்தில் திறக்கப்பட்ட இனப்படுகொலை நினைவுச்சின்னம் குறித்து SLPP நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சேவின் அறிக்கைக்கு பதிலளித்தார்.

No comments:
Post a Comment