டிரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல் ; ஈரானை தாக்கிய அமெரிக்கா
ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தாக்குதல்களுக்குப் பிறகும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த டொனால்ட் டிரம்ப் , "ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திறனை அழிப்பதும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதன்மையான அரசால் முன்வைக்கப்படும் அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்துவதும் எங்கள் நோக்கமாகும்.
தாக்குதல்கள் அற்புதமானவை, இராணுவ வெற்றி. ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் வசதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கின் மிரட்டலான ஈரான் இப்போது சமாதானத்தை ஏற்க வேண்டும், இல்லையென்றால், எதிர்கால தாக்குதல்கள் மிகப் பெரியதாக இருக்கும்" என்று கூறினார்.
டிரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல் ; ஈரானை தாக்கிய அமெரிக்கா
Reviewed by Vijithan
on
June 22, 2025
Rating:
Reviewed by Vijithan
on
June 22, 2025
Rating:


No comments:
Post a Comment