ஜேர்மனியில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்த ஜனாதிபதி
ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நேற்று பிற்பகல் ஜேர்மனியில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்தார்.
அங்கு வசிக்கும் இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில், ஜேர்மனியில் வசிக்கும் பல இலங்கை வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பங்கேற்றனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மக்களை அன்புடன் வரவேற்று உரையாற்றுகையில், ஒரு வளமான அரசுக்கு நாம் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பங்களிப்பை பாராட்டிய ஜனாதிபதி, சரிந்த அரசை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நிலையான ஆரம்பம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.
Reviewed by Vijithan
on
June 14, 2025
Rating:


No comments:
Post a Comment