மன்னார் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயம் ...கடலென குவிந்த பக்தர்கள்!
மன்னார் - சிற்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவானது செவ்வாய்க்கிழமை (3) சிறப்பாக நடைபெற்றது.
மாதத்தில் முதல் வரும் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வருகை தந்து அந்தோனியாரின் திருவருளைப் பெற்றுச் செல்வது வழமை.
வேண்டியதை நிறைவேற்றும் பாம்பு வழிகாட்டி அந்தோனியார்
அந்தவகையில் செவ்வாய்க்கிழமை (3) திருவிழா என்பதால் இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்து அநீதோனியாரை தரிசித்து சென்றனர்.
பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் முகமாக உணவுப் பொருட்களை தானம் செய்வதையும், நினைத்த காரியங்கள் நிறைவேறுவதற்கு தமது வேண்டுதல்கள் எழுதிய கடதாசிகளை மரங்களில் கட்டுவதையும், பிள்ளைப்பேறு வேண்டி தொட்டில்களை கட்டுகின்றனர்.
பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு சென்று வேண்டியவர்களின் பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேறியபடியால் இந்த ஆலயமானது பிரசித்தி பெற்றுள்ளது.
இதன் காரணமாக பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு கிறிஸ்தவ மக்கள் மாத்திரமன்றி பல்வேறு மதத்தவர்ளும் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
Reviewed by Vijithan
on
June 04, 2025
Rating:


No comments:
Post a Comment