மன்னார் செளத்பார் கடற்கரையோரங்களில் கரை ஒதுங்கியுள்ள ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் மூலப்பொருட்கள்
மன்னார் மாவட்டத்தில் செளத்பார் தொடக்கம் தாழ்வுபாடு உட்பட பல்வேறு கடற்கரையோர பகுதிகளில் நுண்ணிய பிளாஸ்டிக் போன்ற சிறிய அளவிலான உருண்டைகள் இலட்சக்கணக்கில் கரை ஒதுங்கியுள்ளது.
முன்னதாக இலங்கை கடற்பரப்பில் பற்றியெறிந்த எவர் கிறீன் கப்பலில் இருந்து வெளியேறிய அதே போன்ற வடிவமுடைய பொருளே மேற்படி தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகிறது.
இவ்வாறான பின்னனியின் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(3) கரையோர காவல் திணைக்களம்,கடற்படை,ராணுவம் இணைந்து முதற்கட்டமாக கடற்கரை ஓரங்களில் ஒதுங்கியுள்ள குறித்த பிளாஸ்டிக் மாதிரி பொருட்களை அகற்றியுள்ளனர்.
குறிப்பாக கடற்கரையோரங்களில் இலட்சக்கணக்கில் இவ்வாறான ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நுண்ணிய பொருட்கள் காணப்படுகின்ற மையினால் முழுமையாக குறித்த பொருட்களை அகற்ற முடியாத நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Reviewed by Vijithan
on
June 13, 2025
Rating:

.jpeg)

.jpeg)


.jpeg)
.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment