முசலியில் சிறப்பாக இடம் பெற்ற போசனை மாத கண்காட்சி
நாடளாவிய ரீதியில் இம்மாதம் போசணை மாதமாக பிரகடனப் படுத்தப்பட்டும் போசனை மிக்க உணவுகளின் முக்கியத்துவம் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் மன்னார் முசலி பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட போசனை கண்காட்சி முசலி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரூபன் லெம்பேர்,முசலி பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் திலீபன்,மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ரூபன் சில்வா, பொது சுகாதார பரிசோதகர்கள் முசலி பிரதேச செயலாளர், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
குறித்த கண்காட்சியில் உடலுக்கு தீங்கிளைக்காத உணவுகள்,மற்றும் இயற்கையான மரக்கறிகள் பழங்களினால் தயாரிக்கப்பட்ட உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டது டன் இலகுவான முறையில் அதிக பண செலவினம் இன்றி ஆரோக்கியமான உணவுகள் தயாரிப்பது தொடர்பான தெளிவூட்டல்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
June 24, 2025
Rating:







No comments:
Post a Comment