வடக்கில் யாசகம் பெறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை
பொது இடங்களில் யாசகம் பெறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களுக்குமான ஆலோசனைக் கலந்துரையாடல் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அதில் ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் வளவாளராக பங்குபற்றி கருத்து தெரிவித்தார்.
இதன்போது அவர், வடக்கு மாகாணத்தில் யாசகம் பெறுபவர்களால் ஏற்படும் பிரச்சினைகளையும், யாசகம் சார்ந்த சட்டங்களையும் மத்திய மாகாண ரீதியில் அல்லாது சகலரும் ஒன்றிணைந்த சட்ட ஏற்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என கோரியிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் பொது இடங்களில் யாசகம் பெறுபவர்களைக் கட்டுப்படுத்த கடந்த காலங்களைப் போன்று தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்
Reviewed by Vijithan
on
June 10, 2025
Rating:


No comments:
Post a Comment