அண்மைய செய்திகள்

recent
-

ஒக்டோபர் 23 இலங்கையர் தின நிகழ்வு

 இலங்கையர் தினத்தை எதிர்வரும் ஒக்டோபர் 23 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.


மாகாணசபைத் தேர்தல் 2026 ஆரம்பத்தில் இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.


அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.


” தேசிய சமத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் புதியதொரு ஆரம்பமாக இலங்கையர் தின நிகழ்வு அமையும் என உறுதியாக நம்புகின்றோம். தேசிய சமத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்குரிய பாரிய பொறுப்பு எமது அரசுக்கு உள்ளது. அதனை நோக்கி பயணிப்போம்.

ஒக்டோபர் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் நடவடிக்கை தொடரும். இவ்வாறு நல்லிணக்கம் நோக்கி விரிவான பயணம் தொடரும்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்




ஒக்டோபர் 23 இலங்கையர் தின நிகழ்வு Reviewed by Vijithan on July 24, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.