அண்மைய செய்திகள்

recent
-

பாலியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பான விரிவான கலந்துரையாடல் இன்று

 பாலியாறு நீர்த்திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (13.07) ஞாயிற்றுக்கிழமை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.

இதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

இலங்கையில் உள்ள பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்கள் மட்டுமே குறைந்த அளவிலான நீர்வளங்களை பெற்றிருக்கின்றது.


அந்த வகையில்

இந்த பாலியாறு குடிநீர் நீர்த்திட்டம் பூர்த்தியடைந்ததும், மன்னார் மாவட்டத்திற்கும் யாழ்ப்பாணத்துக்கும் குடிநீரை வழங்க முடியும்,


இந்தத் திட்டம் நிறைவேறிய பிறகு, சுமார் 4.15 இலட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்குவது சாத்தியமாகும்.


இந்தத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் நீர்த்தேக்கம் சுமார் 828 ஹெக்ரெயர்கள் பரப்பளவில் இருக்கும். மேலும், இது 256 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியது.

இதனால் சுற்றுச்சூழலுக்குச் சில பாதிப்புகள் ஏற்படலாம், ஆனாலும் அந்தத் தாக்கங்களைக் குறைக்க நாம் நடவடிக்கை மேற்கொள்ள வுள்ளோம்.


இன்று வனவளத் துறையினர் மற்றும் அதிகாரிகள் இந்தத் திட்டத்தைச் செயற்படுத்தல் தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கு ஒப்புக்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.


அந்த ஆய்வுகளின் முடிவில் சில பரிந்துரைகள் வரக்கூடும்

அந்தப் பரிந்துரைகளைப் பின்பற்றி, இத்திட்டத்தை விவசாயிகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுத்தவுள்ளோம் என்றார்.



குறித்த கூட்டத்தில் அனுர கருணாதிலக்க நகர அபிவிருத்தி நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சர்,

தம்மிக்க படபெந்தி சுற்றுச்சூழல் அமைச்சர்,

எம்.எம்.நயீம் நகர்ப்புற வளர்ச்சி கட்டுமானம் மற்றும் வீட்டுவசதிஅமைச்சகத்தின் செயலாளர்.



செல்லத்தம்பி திலகநாதன் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்.


தலைவர் நீர்வழங்கள் மற்றும் வடிகால் அமைச்சு


தலைவர் மன்னார் மாவட்டத்தின் வீதி அபிவிருத்தி அதிகார சபை

மன்னார் மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள்,அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், பொறியியலாளர்கள்,மன்னார் மாவட்டத்தின் நகர சபை மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள்

தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள்,பொதுமக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்















பாலியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பான விரிவான கலந்துரையாடல் இன்று Reviewed by Vijithan on July 13, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.