செம்மணி மனிதப் புதை குழி – இராணுவத்திற்கு தெரியாமல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை
செம்மணி மனிதப் புதை குழியில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை இராணுவத்திற்கு தெரியாமல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த காலப்பகுதியில் இராணுவத்தினர் அப்பகுதியில் குடியிருந்ததை யாராலும் மறுதலிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே செம்மணி மனிதப் புதை குழியை ஆய்வு செய்ய சர்வதேச நிபுணர்களை கொண்டு வந்து ஆய்வு செய்ய அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரினார்.
அநீதிக்கு உட்பட்டவர்களுக்கும் அவர்களது கும்பங்களுக்கும் நீதி வழங்க வேண்டும் என்றால் அதற்கு சர்வதேச விசாரணையே வேண்டும் என சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்தினார்.
இது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றும் அனுப்பப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Reviewed by Vijithan
on
July 11, 2025
Rating:


No comments:
Post a Comment