வயம்ப பல்கலைக்கழகத்தின் 4 மாணவர்கள் விளக்கமறியலில்
குளியாப்பிட்டி வயம்ப பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவருக்கு பகிடிவதை கொடுத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு மூன்றாம் ஆண்டு மாணவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய நான்கு மாணவர்களும் இன்று (26) குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த நான்கு மாணவர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
வயம்ப பல்கலைக்கழகத்தின் 4 மாணவர்கள் விளக்கமறியலில்
Reviewed by Vijithan
on
September 26, 2025
Rating:

No comments:
Post a Comment