திடீர் மழையால் வெள்ளக்காடான மஸ்கெலியா
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (9) மதியம் முதல் கனமழை பெய்து வருகிறது.
இதனால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெருந் தோட்ட தொழிலாளர்கள், பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பிரதான வீதியில் பனி மூட்டம்
கன மழை காரணமாக சாமி மலை ஓயா, காட்மோர் ஓயா, மறே ஓயா, சியத்தகங்குல ஓயா ஆகியற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
காட்மோர் நீர்வீழ்ச்சி, மறே நீர்வீழ்ச்சி ஆகிய இரண்டிலும் அதிக அளவில் நீர் வரத்து ஏற்பட்டு உள்ளது. அத்துடன் இப் பகுதியில் உள்ள அனைத்து ஓடைகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதிகளவில் பனி மூட்டம் காணப்படுகின்றன.
இதனால் ஹட்டன் மஸ்கெலியா வீதியில், நோட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில், மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் பனி மூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகள் வாகனங்களை மிகவும் அவதானமாக செலுத்துமாறு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Reviewed by Vijithan
on
September 09, 2025
Rating:
.jpg)

No comments:
Post a Comment