ரயில் கழிவறையில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தையின் உடல் மாயம்
தெமட்டகொடை, மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் உள்ள ரயில் ஒன்றின் கழிப்பறையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் இருந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் 1ஆம் திகதி குழந்தையின் உடல் கண்டறியப்பட்டு, பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறைக்கு மாற்றப்பட்டது.
பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த உடலை எடுக்கச் சென்றபோது, உடல் காணாமல் போயிருந்ததாக தெமட்டகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தெமட்டகொடை பொலிஸாரின் அறிவிப்பை அடுத்து, மருதானை பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர்.
இது குறித்து இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கைகளை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் மருதானை பொலிஸார் கூறினர்.

No comments:
Post a Comment