சிறுவர் தினத்தை கொண்டாட மதுபானத்துடன் வந்த மாணவர்கள்
மொனராகலை, ஹுலந்தாவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த மூன்று மாணவர்கள் மொனராகலை பொலிஸாரால் புதன்கிழமை (01) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மொனராகலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சிறுவர் தினத்தை கொண்டாடுவதற்காக மூன்று மாணவர்களும் பாடசாலைக்கு மதுபான போத்தலை கொண்டு சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவர் தினத்தை கொண்டாட மதுபானத்துடன் வந்த மாணவர்கள்
Reviewed by Vijithan
on
October 02, 2025
Rating:

No comments:
Post a Comment