அண்மைய செய்திகள்

recent
-

அடுத்த மாதம் முதல் இலவச பொலித்தீன் பைகள் இல்லை

 ஷொப்பிங் பைகள் போன்ற பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்க முடியாத வகையில், நவம்பர் 1 ஆம் திகதி முதல் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலிக்க வர்த்தமானி அறிவிப்பை வெளியிட எதிர்பார்ப்பதாக சுற்றாடல் அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகள் இன்று உயர் நீதிமன்றுக்கு அறிவித்தனர். . 


பொலித்தீன் பயன்பாடு சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்துவதால், அவற்றின் பயன்பாட்டைக் குறைக்க ஒரு திட்டத்தை வகுக்க உத்தரவிடக் கோரி சுற்றுச்சூழல் நீதி மையம் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இந்த வழக்கு தொடர்பாக சுற்றுச்சூழல் நீதி மையம் தாக்கல் செய்த மனு, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் சம்பத் அபேகோன் உள்ளிட்ட மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் அழைக்கப்பட்டது. 

சிறப்பு அங்காடிகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களால் நுகர்வோருக்கு வழங்கப்படும் ஷொப்பிங் பைகளின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக அவற்றின் மீது வரி விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுற்றாடல் அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளால் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி உயர்நீதிமன்றில் இணக்கம் வௌியிட்டிருந்ததாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அந்த இணக்கத்திற்கு அமைய பிரதிவாதிகள் செயற்படாமை காரணமாக இந்த மனுவை தாக்கல் செய்ய வேண்டி ஏற்பட்டதாக சுற்றுச்சூழல் நீதி மையம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே, தெரிவித்துள்ளார். 

இதன்போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அவந்தி பெரேரா, நவம்பர் 1 ஆம் திகதி முதல் ​ஷொப்பிங் பைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் வகையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். 

அதன்படி, அந்த அறிவிப்புக்கு சுற்றுச்சூழல் நீதி மையம் இணக்கம் வௌியிட்டதால் வழக்கு விசாரணையை நிறுவுறுத்தி உத்தரவிடப்பட்டது.




அடுத்த மாதம் முதல் இலவச பொலித்தீன் பைகள் இல்லை Reviewed by Vijithan on October 01, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.