வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை திருடிய கும்பல் கைது!
வங்கிக் கணக்கிலிருந்து ரூ.569,610.00 மோசடி செய்த வழக்கில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் துறையின் வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு 29.05.2024 அன்று கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த சந்தேக நபர்கள் நேற்று (14) கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மோசடி, நிதி துஷ்பிரயோகம் மற்றும் நம்பிக்கை மீறல் ஆகிய குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய ஒரு சந்தேக நபரும், அதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த மூன்று சந்தேக நபர்களும் ஆவர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 மற்றும் 38 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் தெஹிதெனிய, முருத்தலாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விசாரணையில், சந்தேக நபர்கள், தண்ணீர் மோட்டாரை விற்பனை செய்வதற்காக இணையதளத்தில் வெளியிடப்பட்ட விளம்பரத்தின் அடிப்படையில், விற்பனையாளருக்கு முன்பணம் செலுத்துவதாகக் கூறி, விற்பனையாளரின் வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட OTP எண்ணைப் பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் இன்று (15) வாரியபொல நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
மேலும் குற்றப் புலனாய்வுத் துறையின் வடமேற்கு மாகாணப் பிரிவின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

No comments:
Post a Comment