மன்னார் திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு விவகாரம்
மன்னார் திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு சம்பவம் தொடர்பில் முதல் முறையாக 10 நபர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் இடம் பெற்றுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
இன்றைக்கு மன்னார் நீதவான் நீதிமன்றத்திலே திருக்கேதீஸ்வர கோயில் வளைவு 2019-ஆம் ஆண்டு உடைத்த சம்பவம் சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஆறு வருடங்கள் கடந்த நிலையிலேயும் இன்றைக்குத் தான் முதல் தடவையாக மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 10 பேருக்கு எதிராக இந்த வழக்கு ஆரம்பம் ஆகி இருக்கிறது.
அதிலே ஒருவர் மரணித்துவிட்டார் மீதம் உள்ள ஒன்பது பேர் விசாரணைக்காக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
முதலாவது சாட்சி இன்றைக்கு சாட்சியம் அளித்துக் கொண்டிருந்த வேளையிலே குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கூண்டிலே இருக்கிறவர்களுக்கும் அதிகமானவர்கள் இந்த வளைவு உடைப்பு சம்பவத்திலே ஈடுபட்டிருந்தார்கள் என்று கூறிய காரணத்தினாலே குற்றப்பத்திரிகையில் அந்த 10 பேருடைய பெயர் மட்டும்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது அவர்களும் வேறு ஆட்களும் சேர்ந்து அதை செய்தார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்காத காரணத்தினாலே விசாரணை அந்த நிமிடத்தோடு நிறுத்தப்பட்டு குற்றப்பத்திரிகை அப்படியாக திருத்தப்பட்ட பிறகு அதாவது கூடுதலாக இருந்தவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு குற்றஞ்சாட்டப்பட வேண்டும் அல்லது குற்றப்பத்திரிகையிலே இப்போது குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் வேறு ஆட்களும் என்று அந்த குற்றப்பத்திரிகை திருத்தப்பட வேண்டும் என்று நீதவான் கூறியதன் காரணமாக அத்தோடு சாட்சியம் இடைநிறுத்தப்பட்டு மேலதிக விசாரணைக்காக, மேலதிக விளக்கத்துக்காக 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ஆம் தேதிக்கு தேதி இடப்பட்டிருக்கிறது.
அன்றைய தினம் அநேகமாக குற்றப்பத்திரிகை திருத்தப்பட்டு இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என் தெரிவித்தார்
.jpg)
No comments:
Post a Comment