மன்னார் நறுவிலிக்குளம் விளையாட்டுத் தொகுதியில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு.
மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் விளையாட்டுத் தொகுதியில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (3) மாலை
இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே வைபவ ரீதியாக திறந்து வைத்து வீர வீராங்கனைகள் இடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் யுவதி களிடையே விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 94 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான நீச்சல் தடாகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு வீரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,நானாட்டான் பிரதேச செயலாளர்,இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர்,நானாட்டான்,முசலி பிரதேச சபைகளின் தவிசாளர்கள்,,திணைக்கள தலைவர்கள்,மாவட்ட விளையாட்டு துறை அதிகாரிகள்,இளைஞர்கள்,யுவதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment