மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு றிஷாட் பதியுதீன் எம்.பி நிவாரணங்கள் வழங்கிவைப்பு
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார் உப்புக்குளம், கொந்தைப்பிட்டி ஜென்னத் நகர் பிரதேச மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணம் நேற்று (09) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் வழங்கி வைக்கப்பட்டது.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்படைந்த இம் மக்கள் தங்களது வீடுகளுக்கு குடியேறுவதற்கு முதல் தேவையாக இருந்த அத்தியாவசிய பொருட்களுடான குறித்த நிவாரணங்களே கையளிக்கப்பட்டது.
இதன் போது, பிரதேசங்களின் மதஸ்தலங்களின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் இதன் போது கலந்து கொண்டனர்.
இதேவேளை வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் நானாட்டான்-அறுவை குண்டு பகுதி மக்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment